கோலாலம்பூர், செப்டம்பர்.10-
வெளிநாடுகளில் உள்ள மலேசியத் தூதரகப் பிரதிநிதிகள், அந்நாடுகளுடனான உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டுமென பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளத்தைப் பெருக்கும் நோக்கில், இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும், அதிகமான அந்நிய முதலீட்டை ஈர்ப்பதிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
புத்ராஜெயாவில் கடந்த செப்டம்பர் 4-ம் தேதி, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்ற 7 தூதரக அதிகாரிகளையும், மரியாதை நிமித்தமாகச் சந்தித்த அன்வார், அவர்களிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








