Oct 2, 2026
Thisaigal NewsYouTube

எதிர்த் திசையில் 150 கி.மீ பயணம்! போதை லாரி ஓட்டுநரால் பெரும் பரபரப்பு!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எதிர்த் திசையில் 150 கி.மீ பயணம்! போதை லாரி ஓட்டுநரால் பெரும் பரபரப்பு!

ஷா ஆலாம், நவம்பர்.30-

ஒரு மர்ம லாரி ஓட்டுநர், அதிகாலையில் புக்கிட் பெருந்தோங் சுங்கச் சாவடியிலிருந்து சுங்கை பூலோ வரை சுமார் 150 கிலோமீட்டர் தூரத்திற்கு எதிர்த் திசையில் அபாயகரமாக வாகனத்தை ஓட்டிச் சென்று பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். லாரியை நிறுத்த முயன்ற காவற்படையின் வாகனத்தை ஓட்டுநர் இடிக்க முயன்றதால், அந்தப் பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு நீடித்தது.

லாரி ஓட்டுநரைத் துரத்திச் சென்று பிடித்த காவற்படையினர், அவரைத் தாமான் பூங்கா ராயா, புக்கிட் பெருந்தோங் பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர். லாரியும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட ஓட்டுநரின் சிறுநீர்ப் பரிசோதனையில் ஷாபு போதைப்பொருள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் காவற்படையின் தலைவர் சுப்ரிண்டெண்டன் இப்ராஹிம் ஹுசேன் தகவல் வெளியிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

55 மலேசியர்கள் மாயமான நேபாள வெள்ளம்: ஒருவர் 37 நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக நாடு திரும்பினார்

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

பாலஸ்தீனியர் கடத்தல் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவருக்கு கைது ஆணை

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

கோலாலம்பூரில் களைகட்டியது F1 பந்தயம்: 365 போலீசார் களத்தில் குவிப்பு, 9,000 வாகனங்களுக்கு நிறுத்தும் வசதி

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

2-வது இடத்தில் மலேசியக் கடப்பிதழ்: உலக நாடுகளின் நம்பகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்துறை அமைச்சு தகவல்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

தம்புன் அருகே பரிதாபம்: சாலை விபத்தில் 2 பள்ளி மாணவிகள் பலி; ஒருவர் படுகாயம்

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை

ஜோகூரில் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 1,346 வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை