ஜோகூர் பாரு, நவம்பர்.01-
வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல், வாகன நுழைவு அனுமதி பெறாத அல்லது அதனைச் செயல்படுத்தாத வெளிநாட்டு வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள், குறிப்பாக சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள், மலேசியாவை விட்டு வெளியேற முடியாது என ஜேபிஜே அறிவித்துள்ளது.
நிலுவையிலுள்ள அனைத்து அபராதங்களையும் செலுத்தி, வாகன நுழைவு அனுமதி பெற்ற பின்னரே அவர்கள் மலேசியாவை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்படும் என்று ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மலேசியா-சிங்கப்பூர் எல்லையில் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாகவும் ஏடி ஃபாட்லி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இந்த அபராதங்களை ஜேபிஜே அலுவலகங்கள், மொபைல் ஜேபிஜே, டங்கா பெயில் உள்ள வாகன நுழைவு அனுமதிக்கான பதிவு செய்யுமிடம் அல்லது மைஇஜி மூலம் இணையத்திலும் செலுத்தலாம் என்று அவர் மேலும் கூறினார்.








