ஜோகூர் பாரு, அக்டோபர்.23-
தனக்கு துரோகம் இழைத்து விட்டார் என்பதற்காக தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிக் காயப்படுத்திய வங்காளதேசப் பெண்மணி ஒருவர் இன்று ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதின்றத்தில் நிறுத்தப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டார்.
34 வயது பெகம் மசுமா என்ற அந்தப் பெண்மணி தனக்கு எதிராக குற்றசாட்டை ஒப்புக் கொண்டார். வங்காளதேச மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் நீதிபதி டத்தோ அஹ்மாட் கமால் அரிஃபின் முன்னிலையில் அந்தப் பெண்மணிக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த காதலுனுக்குத் தனது சொந்த நாட்டில் மனைவியும், பிள்ளைகளும் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் ஜோகூர், கெளாங் பாத்தாவில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டது.








