Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி
தற்போதைய செய்திகள்

ஆயுதப்படைகளுக்கான இராணுவ கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - தற்காப்பு அமைச்சு உறுதி

Share:

ஆயுதப்படைகளுக்கான இராணுவ உபகரணங்கள் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதை மலேசிய தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

நிதி கசிவு அல்லது தவறான பயன்படுத்தலைத் தடுக்க மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், தற்போது அனைத்து கொள்முதல் நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

பத்து 3 முகாமில் இன்று நடைபெற்ற ஆயுதப்படைகளுக்கான மடானி பொருளாதாரத் திட்ட நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது எந்தத் தடையும் அமலில் இல்லை என்றும், நிதி முறைகேடுகளைத் தடுக்கும் அமைப்புகளை தாங்கள் செயல்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இராணுவத்தின் முக்கியச் செயல்பாடுகளும், அதன் தயார்நிலையும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், கொள்முதல் தடை குறித்துத் தனது அமைச்சு நிதியமைச்சுடன், கலந்தாலோசித்து வருவதாக காலிட் தெரிவித்திருந்தார்.

மேலும், முன்னாள் உயர்மட்ட ஆயுதப்படைத் தலைவர்கள் பலர் மீது சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்த தடையானது அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்