Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தேசிய ஊடகவியலாளர் தினத்தின் தொடக்க விழா
தற்போதைய செய்திகள்

தேசிய ஊடகவியலாளர் தினத்தின் தொடக்க விழா

Share:

ஹவானா எனப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய ஊடகவியலாளர் தினத்தை தகவல் மற்றும் இலக்கவியல் துணை அமைச்சர் தியோ நீ சிங் இன்று தலைநகரிலுள்ள பெர்னாமா தலைமையகத்தில் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

மலேசியாவில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ‘சுதந்திரமான ஊடகமே ஜனநாயகத்தின் பிரதானம்’ என்ற கருப்பொருளில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய ஊடகவியலாளர் தினம் இன்று மே 27 ஆம் தேதி முதல் வரும் மே 29 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கொண்டாடப்பட விருக்கிறது.

“Media Hunt Hawana“ எனும் கோலாலம்பூரிலிருந்து ஈப்போ வரையிலான புதையல் தேடும் போட்டியுடன் தொடங்கிய இந்நிகழ்வில் சுமார் 150 பேர் பங்கு கொண்டுள்ளனர்.

இப்போட்டியில் பங்கேற்ற 40 வாகனங்கள் இன்று காலை 8.00 மணியளவில் பெர்னாமா தலைமையகத்திலிருந்து ஈப்போ நோக்கிப் புறப்பட்டது. இந்த வாகன அணி வகுப்பை தியோ நீ சிங் வழியனுப்பி வைத்தார்.

Related News