Oct 16, 2026
Thisaigal NewsYouTube

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை பலனாக இறக்குமதி அரிசி விலை குறைந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை பலனாக இறக்குமதி அரிசி விலை குறைந்தது

டிச. 7-

டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பச்சரிசியின் விலை குறைந்துள்ளது. இது இந்திய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்த விலை குறைப்பு சாத்தியமானது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

சவால்மிகுந்ததாக மாறிக்கொண்டு இருக்கும் மக்களின் வாழ்க்கைச் செலவின விவகாரத்தை கையாளுவதில் மடானி அரசாங்கம் எத்தகைய கடப்பாட்டை கொண்டுள்ளது என்பதையே பச்சரிசி விலை குறைப்பு காட்டுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்துடன் மலேசியா வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக இறக்குமதி செய்யப்படும் பச்சரிசியை மிக குறைவான விலையில் வாங்கும் நிலை தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் விளக்கினார்.

பினாங்கு, பெர்மாத்தாங் பாவ், கம்போங் மஸ்ஜிட் தீமாவில் மடானி மலிவு விலை விற்பனையை ஏகக்காலத்தில் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →