அலோர் ஸ்டார், டிசம்பர்.09-
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள பிரான்ஸ் நாட்டவர் ஒருவரின் தலைவிதி அடுத்த ஜனவரி மாதம் இறுதியில் நிர்ணயிக்கப்படவிருக்கிறது.
34 வயது Tom Felix என்ற அந்த பிரான்ஸ் நாட்டவர், கடந்த 2023 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். திடக்கழிவு நிர்வாக தொழிற்சாலையின் முன்னாள் நிர்வாகியான அந்த அந்த பிரான்ஸ் நாட்டவர், மலேசியாவில் தனது வர்த்தக சகாவுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்த போது போதைப் பொருளுடன் பிடிபட்டார்.
அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பிராசிகியூஷன் தரப்பும், எதிர்தரப்பும் தங்கள் வாதத் தொகுப்பை சமர்ப்பிக்கவிருப்பதாக அந்த பிரான்ஸ் நாட்டவரின் தாயாரும், வழக்கறிஞரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.








