Oct 16, 2026
Thisaigal NewsYouTube

டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் தொடங்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் தொடங்கப்படும்

டிச. 8-

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைலாபுவான் – கோத்தா கினா பாலு இடையிலான FERRY சேவை வரும் டிசம்பர் 15ஆம் தேதி மீண்டும் தொடங்கப்படும் என பிரதமர் துறையுன் கூட்டரசு பிரதேசங்களுக்கான அமைச்சர் Dr Zaliha Mustaf தெரிவித்தார்.

இது இலாபுவானின் போக்குவரத்து முறையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை என்று Dr Zaliha கூறினார். இந்த FERRY சேவை இலாபுவானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, அந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பயணிகளுக்கும் Terminal feri roll-on roll-off படகுத் துறைமுகத்திற்கும் தற்போது விதிக்கப்படும் 50 விழுக்காடு பயணக் கட்டணக் குறைப்பை FERRY பயனர்களுக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த FERRY சேவையை மீண்டும் தொடங்குவதால், இலாபுவானையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உள்ளூர் தொழில்களையும் ஆதரிக்கும் இஃது அந்தப் பகுதிக்கு பொருளாதார வளர்ச்சியை கொண்டு வரும் என்று Dr Zaliha எதிர்ப்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →