நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்ப வானிலை காரணமாக அவசர கால பிரகடனத்தை அறிவிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைக்கு அவசர காலத்தை அறிவிப்பது தொடர்பில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று புத்ராஜெயா, பெர்டானா புத்ராவில் பேரிடர் நிர்வாக நடவடிக்கைக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அகமட் ஜாஹிட் இதனை தெரிவித்தார். கடந்த மே 10 ஆம் தேதி மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மேட் மலேசியா அறிவிப்பின்படி கெடா மாநிலத்தில் , பாலிங்கிலும், பேராவில் கிந்தா, உலு பேராக் மற்றும் மஞ்சோங்கிலுல் சுட்டெரிக்கும் வெயிலினால் முதல் கட்ட எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


