Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தெலுக் இந்தானில் பெரும் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

தெலுக் இந்தானில் பெரும் வெள்ளம்

Share:

மோசமான வானிலை காரணமாக கனத்த மழையால் தெலுக் இந்தானில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரை ஒப்பிடும்போது இம்முறை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்,

வழக்கமாக மழை காலத்தில் இங்குள்ள மக்கள் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கும் நிலையில், இம்முறை ஆயுத்தமாவதற்கு முன்னரே பெரும் வெள்ளம் ஏற்பட்டு விட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

இப்பேரிடர் குறித்து தகவல் அளித்த பேரா மாநில பேரிடர் நிர்வாக செயற்குழுவின் பேச்சாளர் தெரிவிக்கயில், 54 குடும்பங்களைச் சேர்ந்த 183 பேர் பாதிக்கப்பட்டு த்யர் துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் எனக் கூறினார்.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, இவ்வட்டாரத்தில் 11 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

Related News