பேங்க் ராக்யாட் தனது 7 லட்சத்து 83 ஆயிரத்து 324 வாடிக்கையாளர்களுக்கு 2025-ஆம் நிதியாண்டிற்காக 18 விழுக்காடு லாப ஈவை அறிவித்துள்ளது.
தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் இன்று கோலாலம்பூர், மெனாரா கெம்பார் பேங்க் ரக்யாட் மண்டபத்தில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த 18 விழுக்காடு லாப ஈவு விநியோகத்திற்காக வங்கி மொத்தம் 534.7 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் சுட்டிக்காட்டினார்.
இது கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த லாப ஈவை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த 2024 ஆம் ஆண்டு 17 விழுக்காடு லாப ஈவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவின் மூலம் வங்கியில் உறுப்பினர்களாக உள்ள 7.8 இலட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைவர் என்றும், வங்கியின் சிறந்த நிர்வாகத்திற்காக பேங்க் ராயாட் பொறுப்பாளர்களுக்கு தமது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் ஸ்டீவன் லிம் தெரிவித்தார்.
2025 டிசம்பர் 31- ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், பேங்க் ராக்யாட் வரி மற்றும் ஜக்காத் செலுத்துவதற்கு முன்பாக RM1.9 பில்லியன் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 4.2 விழுக்காடாகும் அதிகமாகும் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
சந்தாதாரர்களுக்கான இந்த லாப ஈவுத் தொகை இன்று, ஏப்ரல் 16, 2026 முதல் அவர்களது கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்பதையும் அவர் விளக்கினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் பேங்க் ரக்யாட் தலைமை செயல் முறை அதிகாரி அகமது ஷாரில் முகமட் ஷெரீப்பும் உடன் இருந்தார்.










