கோலாலம்பூர், ஜூலை.31-
எஸ்டிஆர் எனப்படும் சும்பாங்கான் தூனாய் ரஹ்மா மற்றும் மக்களுக்கான இதர உதவித் திட்டங்களைத் தமது தலைமையிலான மடானி அரசாங்கம் தொடரும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் 13ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.
மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான 13 ஆவது மலேசியத் திட்டத்தில் இந்த உதவித் திட்டங்களைத் தொடர்வதென அரசாங்கம் உறுதிப் பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








