ஷா ஆலாம், செப்டம்பர்.11-
இன்று வியாழக்கிழமை அதிகாலை கிள்ளான் காப்பாரில் உள்ள ஜாலான் கெம்பாஸ் கீரி என்ற பகுதியில் சாலையோரத்தில் உடலில் பல காயங்களுடன் ஆடவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 33 வயதுடைய அந்த ஆடவர் மலேசியர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக அச்சடலம் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிள்ளான் மாவட்ட ஓசிபிடி உதவி ஆணையர் எஸ். விஜய ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வழக்கு பீனல் கோட் பிரிவு 320-ன் கீழ் விசாரணை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








