Jul 24, 2026
Thisaigal NewsYouTube
ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் துணைப் போலீஸ் படைத்தலைவர் அயோப் கான்
தற்போதைய செய்திகள்

ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெறுகிறார் துணைப் போலீஸ் படைத்தலைவர் அயோப் கான்

Share:

அரச மலேசிய போலீஸ் படைத்துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை வரும் வரும் ஜுலை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் அதிகாரப்பூர்வமாகக் கட்டாயப் பணி ஓய்வு பெறுகிறார். போலீஸ் படையில் சுமார் 35 ஆண்டுகள் அயோப் கான் ஆற்றிய நீண்ட நெடிய சேவை இத்துடன் நிறைவுக்கு வருகிறது.

அயோப் கான், சுயசரிதை புத்தகமான 'பெண்டாங் முதல் புக்கிட் அமான் வரை' வெளியீட்டு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தகவலை உறுதிப்படுத்தினார். கடந்த 2023 ஜூன் மாதம் போலீஸ் படையின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர், ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் போன்ற பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News