Jan 19, 2026
Thisaigal NewsYouTube
சுங்கத்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது
தற்போதைய செய்திகள்

சுங்கத்துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது

Share:

கோலக்கிள்ளான் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியா, பிரிஸ்பேனுக்கு கொள்கலன் மூலம் 78 கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 336 கிரோ எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசிய சுங்கத்துறை முழு வீச்சில் விசாரணை மேற்கொண்டு வருவதாக சுங்கத்துறை துணை இயக்குநர் டத்தோ சஸாலி முஹம்மட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உத்தரவின்படி , இந்த கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கை 2 வாரங்களில் தயாரிக்கப்பட்டு விடும் என்றும், அது வரையில் எந்தவொரு தகவலும் வெளியிட இயலாது என்று சஸாலி முஹம்மட் குறிப்பிட்டார்.

மிகப்பெரிய அளவிலான இந்தப் போதைப்பொருள் கடத்தலில் மலேசிய சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்டிருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக சஸாலி முஹம்மட் குறிப்பிட்டார்.

Related News