கோத்தா திங்கி, அக்டோபர்.11-
இரண்டு வாகனங்கள், நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், இரு வாகனங்களும் தீப்பற்றிக் கொண்டன. இதில் ஐவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் இன்று காலை 11.25 மணியளவில் ஜோகூர், கோத்தா திங்கி, செனாய்- டெசாரு சாலையின் 56 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
விபத்து நடந்த அடுத்த சில விநாடிகளிலேயே இரண்டு வாகனங்களிலும் இருந்தவர்கள் தத்தம் வாகனங்களை விட்டு அவசர அவசரமாக வெளியேறியதால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பணிக்குத் தலைமையேற்ற கமாண்டர் முகமட் ஹஸ்மி ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
அவசர அழைப்பு கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இரு வாகனங்களில் கொழுந்து விட்டு எரிந்த தீயை சுமார் 20 நிமிடத்தில் தீயைக் கட்டுப்படுத்தினர்.








