மலேசிய கப்பல்களை ஹார்முஸ் நீரிணையில் இருந்து வெளியேற்றுவதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவற்றை மலேசிய கடற்படை பாதுகாப்பாக அழைத்துச் வர வேண்டிய அவசியம் இல்லை என தற்காப்பு துணை அமைச்சர் அட்லி ஜஹாரி தெரிவித்துள்ளார்.
ஈரான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதால், இரு நாடுகளுக்கிடையேயான வலுவான இருதரப்பு உறவுகள் இதனை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் வருவதால், ஈரானுக்கு தமது நன்றியையும் அட்லி ஜஹாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மலேசியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார தேவைகள் தொடர்பான விவகாரங்களில் ஈரான் தொடர்ந்து உதவி வழங்கும் என அமைச்சு நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








