கோலாலம்பூர், அக்டோபர்.28-
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட பிடிஆர்எம், AI தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்திருப்பதாக தேசிய காவல்துறைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தற்போது அதிகம் இணையத் தளங்களில் நடந்து வருவதால், அதனை எதிர்கொள்ள AI முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சுடன் பிடிஆர்எம் இணைந்து, சைபர் உலகில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், தடுப்பதற்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளதாக அயோப் கான் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் பல பிரிவுகள், தற்போது இணையம் வழியாக நடக்கும் குற்றச்செயல்கள் மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளை விரைவாகக் கண்டறியத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கு AI பயன்பாடு முக்கியக் காரணம் என்றும் அயோப் கான் குறிப்பிட்டுள்ளார்.








