Dec 4, 2025
Thisaigal NewsYouTube
புரோட்டோனின் புதிய செடான் வகை எஸ்70 அறிமுகம் கண்டது !
தற்போதைய செய்திகள்

புரோட்டோனின் புதிய செடான் வகை எஸ்70 அறிமுகம் கண்டது !

Share:

மலேசியக் கார் தயாரிப்பு நிறுவனமான Proton Holdings Bhd தற்போது புதிய செடான் வகை காரான புரோட்டோன் எஸ்70 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

புரோட்டான் கார்கள் வரிசையில் சேர்க்கப்பட்ட முதல் செடான் வகை மாடல் இந்த புரோட்டோன் எஸ்70 இந்தக் கார பேரா தஞ்சோங் மாலிமில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சின் பொதுச் செயலாளர் டத்தோ ஹைரில் யாரி யாகோப் இதன் அறிமுக விழாவிற்குத் தலைமையேற்றார்.

டாக்டர் லி சுன்ராங் கூறுகையில், புரோட்டான் எஸ் 70 புரோட்டானுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துள்ளது என புரோட்டான் தலைமைச் செயல்முறை அதிகாரி டாக்டர் லி சுன்ராங் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

புரோட்டான் எஸ் 70 மக்கள் மனதைக் கவரும் எனத் தமது தரப்பு பெரிதும் எதிர்ப்பார்ப்பதோடு, புரோட்டோன் வீரா, புரோட்டோன் வாஜா, புரோட்டோன் ப்ரிவ் ஆகிய மாடல்கள் எப்படி புரோட்டோன் நிறுவனத்தை சந்தையில் உச்சிக்குக் கொண்டு சென்றதோ அதே மாதிரி தற்போது அறிமுகம் கண்டுள்ள புரோட்டான் எஸ்70உம் புரோட்டோன் நிறுவனத்தை மீண்டும் கார் விற்பனைச் சந்தையில் முன்னேறிச் செல்ல வைக்கும் எனத் தாம் நம்புவதாக டாக்டர் லி தெரிவித்தார்.

Related News