Oct 16, 2026
Thisaigal NewsYouTube

போலீஸ்காரருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலீஸ்காரருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது

கோலாலம்பூர், நவ. 27-


அரச பேராளர் ஒருவருக்கு மெய்காவலர் பணியில் ஈடுபட்டிருந்த போது, காது கேளாத மாற்றுத்திறனாளியான இ- ஹையிலிங் ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படும் போலீஸ்காரர் ஒருவர் தற்போது அரச மலேசிய போலீஸ் படையின் ஒழங்கு நடவடிக்கை விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.

இதனை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இன்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.

மாற்றுத் திறனாளி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்டு இருந்த விசாரணை அதிகாரி மற்றும் மூத்த விசாரணை அதிகாரி ஆகியோரும் இந்த ஒழுங்கு நடவடிக்கை விசாரணைக்கு உட்பட்டு இருப்பதாக சைபுடின் விளக்கினார்.

இந்த விசாரணையை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் தர நிலை இணக்கத்துறை மேற்கொண்டு வருவதாக ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.என். ராயர் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு டின் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →