Mar 24, 2026
Thisaigal NewsYouTube
இணைய பகடிவதையை கடுமையாக கருதுகிறது போலீஸ்
தற்போதைய செய்திகள்

இணைய பகடிவதையை கடுமையாக கருதுகிறது போலீஸ்

Share:

ஜூலை 20-

நாட்டில் கடுமையாகி வரும் பகடிவதை சம்பவங்களை அரச மலேசிய போலீஸ் படை கடுமையாக கருதுகிறது. கருத்துக்களை பதிவேற்றம் செய்வதில் வரம்பு மீற வேண்டாம் என்று Netizen- களுக்கு போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain எச்சரித்துள்ளார்.

வரம்புமீறிய பகடிவதை செயல்களினால் பாதிக்கப்படுகின்றவர்கள் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உட்பட ஏனைய பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்று ஐஜிபி நினைவுறுத்தினார்.

ஊகத்தன்மையில் எந்தவொரு கருத்தையும் வெளியிடுவது மற்றும் பகடிவதை செய்வது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

ஆன்லைன் தளங்களை பயன்படுத்தி ஊகத் தன்மையில் அவதூறு, மிரட்டல் அல்லது பகடிவதைகளை விடுகின்றவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என்பதையும் Tan Sri Razarudin எச்சரித்துள்ளார்.

இதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் நடப்பு குற்றவியல் சட்டம் 506 மற்றும் மலேசிய தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் மூலம் பகடிவதை அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஐஜிபி நினைவுறுத்தினார்.

Related News