Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஜகார்த்தாவில் ரயில் விபத்து: 7 பேர் உயிரிழப்பு, 81 பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஜகார்த்தாவில் ரயில் விபத்து: 7 பேர் உயிரிழப்பு, 81 பேர் படுகாயம்

Share:

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று திங்கள்கிழமை இரவு இரு ரயில்கள் மோதிய விபத்தில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அந்நாட்டு அரசு ஊடகங்களின் தகவலின்படி, ஒரே பாதையில், நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயிலை, அதற்குப் பின்னால் வந்த தொலை தூர பயணிகள் ரயில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் இறுதி எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எனினும், இரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெகாசி திமுர் ரயில் நிலையம் அருகே படுகாயமடைந்த பயணிகளை அவசர சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படும் காட்சிகளும், ரயில் சிதைவுகளில் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் வெளியேற்ற முயலும் காட்சிகளும் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

Related News