வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் உள்ள மாநில மக்கள், இத்தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில ஆட்சியில் தொடர்ந்து சேதம் ஏற்படுவதை தடுக்க மக்கள் விவேகமாக முடிவெடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பெரிக்காத்தான் நேஷனலிடமிருந்து நமது மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மலாய்க்கார்கள், சீனர்கள் மற்றும் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு, பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஒரு போதும் வெற்றி வாய்ப்புக்குரிய ஒரு சிறு இடத்தையும் தவறி வழங்கி விட வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
நம்பிக்கை, திறமை மற்றும் தூய்மையான அரசாங்கம் வேண்டும் என்று வலியுறுத்தும் இவர்கள் நீதிமன்றத்திற்கு நடந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள்தான் நாட்டை காப்பாற்றப் போகிறார்களா? என்று பினாங்கில் நடைபெற்ற ஜலஜாஹ் பெர்படுவான் மடானி செராமாவில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்ட வினாவை எழுப்பினார்.

தற்போதைய செய்திகள்
மாநில ஆட்சியில் சேதம் ஏற்படாமல் இருக்க விவேகமாக வாக்களியுங்கள் - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை
Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


