Oct 17, 2026
Thisaigal NewsYouTube

டத்தோ அந்தஸ்தைக்கொண்ட வங்காளதேசி கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டத்தோ அந்தஸ்தைக்கொண்ட வங்காளதேசி கைது

கோலாலம்பூர், நவ. 12-


சுமார் 11 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மனித வள அமைச்சின் அங்கீகாரத்திற்குரிய அந்நியத் தொழிலாளர்களை இறக்குமதி செய்வதற்கான கோட்டாவை பெறுவதற்கு பொய்யான விவரங்களை உள்ளடக்கிய விண்ணப்பத்தை சமப்பித்ததாக கூறப்படும் டத்தோ அந்தஸ்தை கொண்ட வங்காளதேசியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். கைது செய்துள்ளது.

நிறுவனம் ஒன்றின் இயக்குநரான 40 வயது மதிக்கத்தக்க அந்த வங்காளதேசி, இன்று காலையில் ஷா ஆலாம், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

விசாரணைக்கு ஏதுவாக அவரை 6 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை SPRM பெற்றுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →