Dec 2, 2025
Thisaigal NewsYouTube
நிறுவனங்களுக்கு வற்புறுத்தும் கொள்கை இல்லை
தற்போதைய செய்திகள்

நிறுவனங்களுக்கு வற்புறுத்தும் கொள்கை இல்லை

Share:

தொழில் பயிற்சி திட்டங்களின் விதிமுறைகளை நிறுவனங்கள் மீது திணிக்க முடியாது என்பதால், அது குறித்த தெளிவான கொள்கையை அரசாங்கம் செயல்படுத்தாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது கட்டாயமில்லை என்றாலும், தங்களின் நிறுவனங்களில் தொழில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நியாயமான உதவித் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்க வழங்க வேண்டும் என்று பிரதமர் அன்வார் கூறினார்.

தொழில் பயிற்சி என்பது ஒரு சாதாரண வேலை அல்ல என்பதை தாம் புரிந்துக்கொள்வதாகவும், அதில் ஈடுப்படும் மாணவர்களின் உணவு மற்றும் கட்டணங்களுக்கு ஏற்ற நியாயமான கொடுப்பனவை வழங்க வேண்டும் அன்வார் வலியுறுத்தினார்.

Related News