கோலாலம்பூர், ஜனவரி.19-
சர்ச்சைக்குரிய ராப் பாடகர் Namewee, கட்டுப்படுத்தப்பட்ட மருந்தை வைத்திருந்ததாக, தமக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த புதிய குற்றச்சாட்டை மறுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை கோரினார்.
கடந்த ஆண்டு, அக்டோபர் 22-ஆம் தேதி, Jalan Conlay-விலுள்ள Banyan Tree தங்கும் விடுதியில், 0.78g அளவிலான Sildenafil என்ற பாலியல் தூண்டலுக்கான மருந்தை அவர் வைத்திருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
நச்சுப் பொருட்கள் சட்டம் பிரிவு 9(1)-இன் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது 50 ஆயிரம் ரிங்கிட் அபராதமோ விதிக்கப்படலாம்.
அதே வேளையில், அதே தங்கும் விடுதியிக், 1.57g methamphetamine என்ற போதைப் பொருளை வைத்திருந்ததாக தன் மீது சுமத்தப்பட்ட, திருத்தப்பட்ட குற்றச்சாட்டையும் Namewee மறுத்தார்.
இவ்வழக்கானது வரும் மார்ச் 5-ஆம் தேதி மீண்டும் விசாரணை வருகின்றது.








