Oct 6, 2026
Thisaigal NewsYouTube

ஐ.ஜே.என்னில் டாக்டர் மகாதீரைச் சந்தித்தார் புருணை சுல்தான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஐ.ஜே.என்னில் டாக்டர் மகாதீரைச் சந்தித்தார் புருணை சுல்தான்

புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா, தேசிய இருதயக் கழகமான ஐ.ஜே.என்னில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

டாக்டர் மகாதீர் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில், சுல்தான் ஹசனல் போல்கியா தம்மை சந்தித்து சிறிது நேரம் செலவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஃபார்முலா 1 பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியை முன்னிட்டு மலேசியா வந்திருந்த புருணை சுல்தான், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் மலேசியா, பஹ்ரைன், புருணை தலைவர்களுடன் சிப்பாங் அனைத்துலக கார் பந்தய தளத்தில் நடைபெற்ற போட்டியையும் கண்டுகளித்தார்.

101 வயதான டாக்டர் மகாதீர், அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி செப்டம்பர் 28ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்புக்காக செப்டம்பர் 29ஆம் தேதி ஐ.ஜே.என்னில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →