சாலையை விட்டு விலகி, விளம்பரப் பலகையில் மோதியிருக்கலாம் என்று நம்பப்படும் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 1.33 மணியளவில் ஈப்போ அருகில் Jalan Perindustrian Pengkalan என்ற இடத்தில் நிகழ்ந்தது.
விளம்பரப்பலகை கீழே சாயும் அளவிற்கு பலத்த மோதல் ஏற்பட்ட இச்சம்பவத்தில் 27 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் சைனால் அபிடின் தெரிவித்தார்.
அந்த மோட்டார் சைக்கிளோட்டி, Jalan Perindustrian Pengkalan- லிருந்து பத்து காஜா- வை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் மேலும் கூறினார்.








