ஷா ஆலாம், ஜூலை.31-
காலணி டிசைன் பிரீனியர் பயிற்சித் திட்டத்தின் நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த ஜுலை 28 ஆம் தேதி, SHRDC - ஷா ஆலமில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு காலணி வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அவர்கள் பெற்ற அடிப்படை பயிற்சியின் மூலம் தங்கள் சொந்த தயாரிப்புகள் அல்லது வணிகங்களைத் தொடங்க வாய்ப்பு கிடைத்தது.

நிறைவு விழாவில் SHRDC யின் பொது மேலாளர் புவான் மஸ்லினா ஒஸ்மான் நிகழ்விற்குத் தலைமைத் தாங்கினார். மேலும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மைப் பிரதிநிதித்து டிக்காம் லூர்ட்ஸ் கலந்து கொண்டார்.

பயிற்சியில் பங்கேற்றவர்கள், தங்களின் கைவண்ண வடிவமைப்புகளைக் காட்சிப்படுத்தினர். அவர்களின் முயற்சிக்கு பரவலான பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.








