அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் ஹாரிராயா பெருநாளை முன்னிட்டு ஜோகூர் மாநிலத்தைக் கிட்டத்தட்ட 20 லட்சம் வாகனங்கள் கடக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஜோகூர் பாலம் மற்றும் மலேசியா, சிங்கப்பூரை இணைக்கும் இரண்டாவது வழித்தடமான லிங்கெடுவா ஆகியவற்றின் வாயிலாக மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பெரும் எண்ணிக்கையில் வாகனங்கள் கடந்து செல்லலாம் என்று ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஸமான் மமாட் தெரிவித்துள்ளார்.
ஜோகூர்பாரு, பங்குனான் சுல்தான் இஸ்கன்டார் கட்டடத்தில் உள்ள சுங்கம், குடிநுழைவு, நோய்த் தடுப்பு சோதனை மையம் மற்றும் இஸ்கன்டார் புத்ரிமில் உள்ள கொம்லக்ஸ் சுல்தான் அனு பாக்கார் கட்டடம் ஆகியவற்றின் வாயிலாக வழக்கத்திற்கு மாறாக அதிகமான வாகனங்கள் ஜோகூர் எல்லையைக் கடக்கலாம் என்று கமருல் ஸமான் குறிப்பிட்டார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


