Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அமலாக்க நடவடிக்கைகளை மனித வள அமைச்சு தீவிரப்படுத்தும்
தற்போதைய செய்திகள்

அமலாக்க நடவடிக்கைகளை மனித வள அமைச்சு தீவிரப்படுத்தும்

Share:

கட்டாய வேலை உட்பட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை சரிசெய்ய, முறையான அமலாக்க நடவடிக்கைகளை மனிதவள அமைச்சு தீவிரப்படுத்தும் என்றும் அதன் அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக, தொழிலாளர்களின் நலனுக்கு எதிராக உள்ள எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தமது அமைச்சு ஒருபோதும் சமரசம் செய்யாது என்றும், அது குறித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் விதிகளின் அடிப்படையில், தீபகற்ப மலேசிய தொழிலாளர் துறை மூலம் மனிதவள அமைச்சு பல ஆய்வுகளை ஒருங்கிணைந்து அல்லது கட்டம் கட்டமாக மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

Related News