Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பிகேஆர் கட்சி நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிகேஆர் கட்சி நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்

டிச.9-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் எஞ்சிய 6 ஆண்டு சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விவகாரத்தில் பிகேஆர் கட்சி நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அம்னோ தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

அம்னோவின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள பிகேஆர் கட்சி, முன்னாள் அம்னோ தலைவர் நஜீப்பின் விவகாரத்தில் நேர்மைப் போக்கை கையாள வேண்டும். நஜீப்பை வீட்டுக்காலில் வைப்பதற்கு முன்னாள் மாமன்னர் அரசாணையைப் பிறப்பித்துள்ளாரா? இல்லையா? என்பது குறித்து மடானி அரசாங்கத்திற்கு தலைமையேற்றுள்ள பிகேஆர் கட்சி தெளிவுப்படுத்த வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Datuk Mohd Puad Zakarshi கோரிக்கை விடுத்துள்ளார்.

நஜீப் விவகாரத்தில் நடப்பு அரசாங்கம் நேர்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்றால் 17 மாதங்களில் கவிழும் அபாயம் இருப்பதாக அவர் நினைவுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →