கோலாலம்பூர், செப்டம்பர்.08-
பாலஸ்தீன ஆதரவுக் குழுவான பிடிஎஸ் மலேசியா, தங்களது போராட்டக்கார்கள் சிலரை, வணிக வளாகத்திற்குள் அனுமதிக்க மறுத்த, சூரியா கேஎல்சிசி நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியுள்ளது.
இனப் படுகொலைக்கு எதிராகவும், பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்காகவும் போராடும் அவர்களை, ‘பாதுகாப்பு அச்சுறுத்தலாக’ பார்க்கக் கூடாது என்று பிடிஎஸ் மலேசியா வலியுறுத்தியுள்ளது.
Gaza genocide எதிர்ப்பாளர்களை சியோனிச ஆதரவு நாடுகளில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தலாகப் பார்ப்பார்கள் என்றும், மலேசியாவில் அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.








