கிள்ளான், அக்டோபர்.02-
சிலாங்கூர் பட்டத்து இளவரசர் ராஜா மூடா சிலாங்கூர், தெங்கு அமீர் இப்னி சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் அரச திருமண வைபவம், கிள்ளான், இஸ்தானா ஆலாம் ஷா அரண்மனையில் இன்று கோலாலகமாக நடைபெற்று வருகின்றது.
இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் சுல்தான் அப்துல் அஜிஸ் ராயல் கேலரியில் இருந்து பிரமாண்ட வாகன அணிவகுப்புடன் புறப்பட்ட இளவரசர் இஸ்தானா அரண்மனையை வந்தடைந்தார்.
இன்று காலை 6.30 மணி முதல் அங்கு கூடியிருந்த மக்கள் அவருக்கு கோலாகலமான வரவேற்பு அளித்தனர்.
மூன்று உடன்பிறப்புகளில் இளையவரும், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் ஒரே மகனுமான இளவரசர் தெங்கு அமீர், இன்று சிக் அஃப்ஸா ஃபாடினி அப்துல் அஸிஸைக் கரம் பிடிக்கிறார்.








