மாதம் 2,500 ரிங்கிட் அல்லது அதற்கும் குறைவான வருமானம் பெறும் தேசிய உயர்கல்வி நிதிக் கழகமான பிடிபிடிஎன் கடனாளிகள், அடுத்த ஆண்டு கடன் தவணைகளைச் செலுத்துவதிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவர்.
மாதம் 2,500 முதல் 3,000 ரிங்கிட் வரை வருமானம் பெறுவோர் குறைந்தபட்சம் 50 ரிங்கிட் மாதத் தவணை செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கையால் 4 லட்சத்துக்கும் அதிகமான கடனாளிகள் பயனடைவர்.
மேலும், மாணவர்களுக்கான உணவு உதவித் திட்டத்தை விரிவுபடுத்த 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு 5 ரிங்கிட்டில் உணவு வழங்கப்படும். இதற்கிடையில், பொதுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஃப்லைசிஸ்வா மடானி விமானப் பயண உதவி 400 ரிங்கிட்டிலிருந்து 500 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 60,000க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைவர்.








