கோலாலம்பூர், நவம்பர்.3-
இன்று திங்கட்கிழமை காலை நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 67 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 286 பேர் கெடா மற்றும் பேராக்கில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கெடாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையாத நிலையிலேயே உள்ளது.
நேற்று இரவு 49 குடும்பங்களைச் சேர்ந்த 221 பேர் இருந்த நிலையில், காலை 8 மணி நிலவரப்படி 50 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பெண்டாங் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தானா மேரா விளையாட்டு வளாக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,
இதில் Rambai, Ayer Puteh, Padang Pusing, Padang Peliang, Padang Kerbau, Guar Kepayang மற்றும் Tobiar துணை மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் அடங்கும் என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.








