கோலாலம்பூர், செப்டம்பர்.01-
28 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரும், அவரின் மனைவி ஸிஸி இஸெட்டும் நாளை செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்வாதம் புரியவிருக்கின்றனர்.
நீதிபதி ரோஸ்லி அகமட் முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கில் புங் மொக்தார் மற்றும் அவரின் மனைவி சார்பில் முன்னணி வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கே. குமரேந்தரின் ஆஜராகிறார்.
இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது. அவரின் வழக்கறிஞர் மருத்துவ விடுப்பில் இருந்ததால் வழக்கு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.








