Dec 9, 2025
Thisaigal NewsYouTube
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி: அலட்சியம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம்
தற்போதைய செய்திகள்

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி பலி: அலட்சியம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம்

Share:

போர்ட்டிக்சன், டிசம்பர்.09-

சிரம்பான், லெங்கேங். Taman Senangin- னில் உள்ள Mahkota Hills Club House- சில், நீச்சல் குளத்தில் மூழ்கி, 5 வயது சிறுமி பலியான சம்பவத்தில், அலட்சியம் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, அச்சிறுமியின் பெற்றோர், 15 வயது சகோதரி, ஆசிரியர் மற்றும் மருத்துவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமை, மதியம் 12.15 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, நீச்சல் குளத்தில் பெற்றோரின் கண்காணிப்பு இன்றி அச்சிறுமி குளித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதே வேளையில், அச்சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்ததைப் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கானது, குழந்தைகள் சட்டம் 2001, பிரிவு 31(1)(a)-வின் கீழ், அலட்சியத்தின் அடிப்படையில் பதிவுச் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஜொஹாரி யாஹ்யா குறிப்பிட்டுள்ளார்.

Related News