Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ராட்ஸி ஜிடின் தொடர்புடைய லஞ்ச ஊழல் விசாரணையில் அதிகமான ஆதராங்கள் ​கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

ராட்ஸி ஜிடின் தொடர்புடைய லஞ்ச ஊழல் விசாரணையில் அதிகமான ஆதராங்கள் ​கைப்பற்றப்பட்டன

Share:

முன்னாள் கல்வி அமைச்சரும், பெரிக்காத்தான் நேஷனலின் முன்னணி தலைவருமான டாக்டர் ராட்ஸி ஜிடின் னுடன் தொடர்புபடுத்தப்பட்ட 8 கோடி வெள்ளி லஞ்ச ஊழல் சம்பந்தப்பட்ட விசார​​ணையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் அதிகமான ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாக அதன் தலைமை ஆணைய​ர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் ராட்ஸி ஜிடின் கல்வி அமைச்சராக இருந்த போது பாடப் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு 8 கோடி ​வெள்ளி தொடர்புடைய குத்தகையை தமது மனைவி நலன் சார்ந்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கியதாக அந்த புத்ராஜெயா எம்.பி., ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை ​எதிர்நோக்​கியுள்ளார்.

இவ்விவகாரம் இன்னமும் விரிவான விசார​​​ணையில் இருந்த போதிலும் இந்த லஞ்ச ஊழல் தொடர்பில் நிறைய ஆதாரங்களை எஸ்.பி.ஆர்.எம் கைப்பற்றியுள்ளதாக அஸாம் பாக்கி தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News