Sep 27, 2026
Thisaigal NewsYouTube
SPRM  புதிய தலைமை ஆணையர்: வேட்பாளர் பட்டியலை மாமன்னரிடம் சமர்ப்பித்தார் பிரதமர்
தற்போதைய செய்திகள்

SPRM புதிய தலைமை ஆணையர்: வேட்பாளர் பட்டியலை மாமன்னரிடம் சமர்ப்பித்தார் பிரதமர்

Share:

"மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM புதிய தலைமை ஆணையர் பதவிக்கான தகுதியான வேட்பாளர்களின் பட்டியலை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடம் சமர்ப்பித்தார்.

ஜோகூர் பாருவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், மலேசிய உழல் தடுப்பு ஆணையத்தை வழிநடத்த தகுதியுள்ள நபர்களின் பெயர்கள் மாமன்னரின் பரிசீலனைக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து நகைச்சுவையாக பதிலளித்த அவர், இறுதிப் பட்டியல் தற்போது வெளியிடப்படாது என்றும், முறையான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை ஒழிப்பதில் ஆணையத்தின் பங்கு முக்கியமானது என்பதால், புதிய தலைமை ஆணையரைத் தாமே நேரில் தேர்வு செய்யப்போவதாக மாமன்னர் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News