நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியின் பாரிசான் நேஷனல் வேட்பாளர் சைடி அப்துல் கடீர் இன்று அதிகாலையில் விபத்துக்குள்ளாகினார். தாம் போட்டியிடும் ஜெராம் பாடாங் தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டப்பின்னர் அதிகாலை 3.25 மணியளவில் தமது வீட்டிற்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்த போது ஜெம்போலில் பாசிர் பெசார் - பாலோங் ரோட் சாலையில் அவரின் கார் விபத்துக்குள்ளாது. சொற்ப காயங்களுடன் சைடி உயிர் தப்பியுள்ளார். எனினும் அவரின் கார் ஓட்டுநர் கடுமையான காயங்களுக்கு ஆளாகி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை உறுதிபடுத்திய தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் வஹாப் , இது தொடர்பாக போலீஸ் துறை ஓர் அறிக்கையை வெளியிடும் என்றார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


