May 21, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலர் யோகேஸ்வரிக்கு விருது
தற்போதைய செய்திகள்

பாதுகாவலர் யோகேஸ்வரிக்கு விருது

Share:

ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் பாதுகாவலர் ஆர். யோகேஸ்வரிக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா, மனிதநேயச் சேவைக்கான தேசிய விருது வழங்கி கெளரவித்துள்ளார்.

44 வயதான யோகேஸ்வரிக்கு , இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விருதளிப்பு சடங்கில் பிங்காட் நெகாரா எனும் பிபிஎன் விருது வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டார்.

-ஈப்போ மருத்துவமனையில் ஒரு பாதுகாவலாராக பணியாற்றிய போதிலும் நோயுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கும் , வெளியோளிகளுக்கும், குழந்தைகளுக்கும் யோகேஸ்வரி வழங்கி வரும் மனிதாபிமான தொண்டுப் பணிகள் தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடந்து அந்த பெண் பாதுகாவலரின் நெஞ்சில் உள்ள ஈரத்தை பலர் அறிவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இந்த உயரிய விருதை பெறுவதற்கு யோகேஸ்வரி மிகத் தகுதியானவர், பொருத்தமானவர் என்று மாமன்னர் தமது உரையில் புகழாரம் சூட்டினார்.

தனது கிடைத்த இந்த உயரிய கெளரவத்தை, தம்மைப் பெருமைப்படுத்திய சிறார்களுக்கும், பிரசவத்திற்காக வந்த தாய்மார்களுக்கும், தந்தைமார்களுக்கும் அர்ப்பணிப்பதாக யோகேஸ்வரி குறிப்பிட்டார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்