Jul 15, 2026
Thisaigal NewsYouTube
மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

Share:

மஞ்சோங் மாவட்டம் பெக்கான் கெர்னி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடந்த ஆயுதக் கொள்ளை சம்பவம் தொடர்பாக, மூன்று இந்தோனேசிய நாட்டவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, அரிவாளைக் காட்டி வீட்டில் இருந்தவரை மிரட்டி, சுமார் 10,000 ரிங்கிட் மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த மே 31- ஆம் தேதி காலை 6.27 மணியளவில் போலீசாருக்கு புகார் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கானது, ஆயுதங்களுடன் கும்பலாக கொள்ளை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் குற்றவியல் சட்டம் பிரிவு 395 மற்றும் 397-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News