Oct 9, 2026
Thisaigal NewsYouTube

9 இடங்களுக்கு முறையான உரிமம் இல்லை!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
9 இடங்களுக்கு முறையான உரிமம் இல்லை!

மாசாய், ஜூன்.22-

மாசாய், தாமான் கோத்தா புத்ரி, ஜாலான் செண்டெராயில் உள்ள லாரி, இயந்திர எண்ணெய் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் பத்து வெவ்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான வளாகங்கள் வாடகைக்கு இயங்கி வருவதை ஜோகூர் பாரு மாநகராட்சி மன்றம் கண்டறிந்துள்ளது. 64 ஆயிரத்து 664 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் வாகனங்கள் சுத்தம் செய்யும் இடங்கள், லாரி நிறுத்தும் இடங்கள், பட்டறைகள், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சேமிப்பு நிலையங்கள் போன்ற பல வகையான வளாகங்கள் செயல்பட்டாலும், ஒரே ஒரு வளாகத்திற்கு மட்டுமே முறையான உரிமம் உள்ளது என எம்பிஜேபியின் டத்தோ பண்டார் முகமட் ஹஃப்பிஸ் அஹ்மாட் தெரிவித்தார்.

எம்பிஜேபியும் மலேசியப் செம்பனை வாரியமும் வழங்கிய முறையான உரிமத்துடன் ஒரு செம்பனை சேமிப்பு வளாகம் மட்டுமே செயல்பட்டது. எம்பிஜேபி, எஸ்டபள்யுகோர்ப் உட்படப் பிற நிறுவனங்களுக்கு இது குறித்துத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என முகமட் ஹஃப்பிஸ் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →