கோலாலம்பூர், அக்டோபர்.03-
மூன்று மாதங்களுக்கு முன்பு, 21 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படும் அளவிற்கு ஒரு கும்பலாகக் கூட்டு சேர்ந்து சீனப் பிரஜையிடம் கொள்ளையிட்டதாக மெக்கானிக் ஒருவர், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
42 வயது சையிட் அலி இம்ரான் அல்குட்ரி சையிட் ஸுல்கெஃப்லி என்ற அந்த மெக்கானிக் இன்னும் பிடிபடாமல் இருக்கும் மேலும் இருவருடன் சேர்ந்த இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜுலை 21 ஆம் தேதி இரவு 10 மணியளவில் புக்கிட் டாமன்சாராவில் உள்ள ஒரு பங்களா வீட்டில் சீனப்பிரஜையான 31 வயது Chen Kexue என்பவரிடம் கொள்ளையிட்டதாக அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








