Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்தியர்களின் புலுபிரின்ட் திட்டத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை - பிரதமர் உத்திரவாதம்
தற்போதைய செய்திகள்

இந்தியர்களின் புலுபிரின்ட் திட்டத்திற்கு தொடர்ந்து முன்னுரிமை - பிரதமர் உத்திரவாதம்

Share:

சீன சமூகத்திற்கு குறிப்பாக வருமானம் குறைந்தவர்களுக்கு கம்போங் பாரு திட்டத்தின் வாயிலாக பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதைப் போல இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உயர்விற்கு புலுபிரின்ட் திட்டத்திற்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை வழங்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ரா வாயிலாக பல்வேறு திட்டங்களை வளப்படுத்துவதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு மக்களவைக் கூட்டத்தில் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் மத்தியக் கால மறு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

12 ஆவது மலேசியத் திட்டத்தில் மேலும் கூடுதலாக 1,500 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் எந்தவொரு இனமும் தேசிய நீரோடையில் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அந்தந்த இனத்தவரின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.

Related News