ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் கண்களைப் பறிக்கும் கவர்ச்சிகரமான ஆடைகளுடன் அப்போட்டியில் பங்கேற்பதற்கு பாஸ் கட்சி தலைமையிலான திரெங்கானு மாநில அரசாங்கம் தடைவிதித்த இருப்பதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் தனிப்பட்ட முறையில் அந்த விளையாட்டில் பங்கு கொள்ள ஆர்வம் இருந்தால் அவர்களுக்கு உரிய ஆதரவை வழங்க தாம் தயாராக இருப்பதாக பத்து தொகுதியின் பிகேஆர். நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் அறிவித்துள்ளார்.
உடல் ஆரோக்கியம், உடல் கட்டுக்கோப்பு மற்றும் சிந்தனை ஆற்றல் ஆகியவற்றுக்கு பெரும் அருட்கொடையாக தரப்பட்டுள்ள ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் பெண்கள், திரெங்கானு அரசாங்கம் விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளினால் அவர்களின் திறமையை முடக்கிவிடக்கூடாது என்று பிரபாகரன் தெரிவித்துள்ளார்.








