மாநில மக்களுக்கு வலியுறுத்து
பினாங்கு மாநிலத்தில் பெரிகாத்தான் நேஷனலுக்கு ஆதரவாக பசுமை அலை எழுந்துள்ளதால், வருகின்ற சட்டமன்ற தேர்தலைச் சாதரணமாக கருதிவிட வேண்டாம் என்று பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், மாநில மக்களைக் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் மூன்று பொதுத் தேர்தல்களில், பினாங்கு மாநிலத்தைத் தற்காத்துக் கொண்ட பக்காத்தான் ஹராப்பானுக்கு, வருகின்ற சட்டமன்ற தேர்தல் சோதனை மிகுந்த பல பரிட்சையாகும்.
இம்முறை சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் மாநிலத்தைக் கைப்பற்றிவிடும் என்று அசாத்தியமாக இருந்து விட வேண்டாம் என்று பூலாவ் தீக்கூஸ் சட்டமன்ற உறுப்பினர் கிரிஸ் லீ மாநில வாக்களார்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.








