Dec 2, 2025
Thisaigal NewsYouTube
விளைவுகளை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு தயார்
தற்போதைய செய்திகள்

விளைவுகளை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு தயார்

Share:

தென்மேற்கு பருவமழை மற்றும் எல் நினோ நிகழ்வின் விளைவுகளை எதிர்கொள்ள மாநிலம் மற்றும் கூட்டாச்சி நிலைகளில் அனைத்து வசதிகளிலும் முழுமையான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு செய்துள்ளதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

தற்போது அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க அனைத்து சுகாதார வசதிகளும் நன்கு அமைக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் ஜாலிஹா முஸ்தபா மேலும் விவரித்தார். அதிக வெப்பநிலை தொடர்பான அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுமாறு மக்களுக்கு ஜாலிஹா முஸ்தபா அறிவுறுத்தினார்.

வரும் மே 15 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கவிருப்பதால், மலேசியர்கள் வறண்ட நாட்களையும் குறைந்த மழையையும் சந்திக்க நேரலாம என நேற்று மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, டாக்டர் ஜாலிஹா முஸ்தபா இதனை தெரிவித்தார்.

Related News